Friday, 24 January 2025

இறைவழிபாடு

 கோரிக்கையுடனே 

தொடர்கிறது 

உமது எமதுறவு. 

Monday, 20 January 2025

மழை

 மரக்கன்று ஒன்று வைத்தேன் 

நீரூற்ற மறந்தேன்

சற்றுநேரத்திலே 

மிதமான மழை

- இயற்கை 

Friday, 10 January 2025

தந்தையிழந்த ஒருவன்

தன் மகன்,

தந்தையாகி பிறகே 

மகனுக்கும் அவன் தந்தைக்கும் ஆன 

உறவும் உணர்வும் 

செழுமையடைகிறது 

ஒவ்வொருநாளும்...

Tuesday, 7 January 2025

அழுகை

 அழுகை 

ஆணுக்கும் சொந்தம் 

சில சமயங்களில்...