Tuesday, 22 August 2017

அவள்

அக்கூந்தலை கொண்டு சடைப்பின்னி, இருத்தென்னையில் இணைத்து ஒய்யாரமாக ஊஞ்சலாடுவேன் #அவளது கூந்தல்

உன் நெற்றிப்பலகையில் எழுதிய விதிக்கூற்றை, விதித்திருத்தம் செய்வேன் #அவளது நெற்றி

கைவிரல்விட்டு எண்ணிவிடலாம், இயற்கையாய் இருக்கும்பட்சத்தில் #அவளது புருவமயிர்

குமரிக்கண்டம் சங்கமத்தில், கண்டஅழகினை மீண்டும் உன்விழியில் கண்டேன் #அவளது கண்விழி

தாகம் தணிக்க, தண்ணீர் நிரப்பும் நீர்க்குழிகள் #அவளது காது

அது ஒரு தொடர்வேகத்தடை, சற்று மெதுவாகவும் மென்மையாகவும் பயணித்தேன் அப்பகுதியில் #அவளது உதடு

சறுக்குமர ஞாபகமே மிச்சம், ஏற்றமேறி இறங்கினேன் அவள் நெஞ்சுக்குள் #அவளது முகவாய்க் கட்டை

இந்த விமர்சனம் உன்னை பட்டைதீட்டிய அந்த கவிக்கு

No comments:

Post a Comment