Wednesday, 18 April 2018

கக்க வேண்டிய சூழ்நிலை

எது  எப்படி நடந்தா நமக்கென்ன.., ஏன்னா வயிறு வலி நமக்கு வந்தாத்தானே
கஷ்டம் நமக்கு.., எவனுக்கோ வந்தா நம்ம மயிருக்கு என்ன?
பசிதீர சோறு - மானம் காக்க உடை - நிம்மதி உறக்கம்
மாதச்சம்பளம் - டேட்டிங் - கஜ கஜா - கெத்து வாழ்க்கை
இந்த மாறி நிறைய விதமான மக்கள் மேயும் இங்கு....

ரொம்பநாள் அத பத்தி பேச இஷ்டம் இல்லாம... கடைசில வாந்தி எடுக்க வேண்டிய சூழ்நிலை
மனசுல இருக்கறத ஒரு draft பண்ணி நண்பனுக்கு அனுப்பினேன்

முதல் வரி மட்டுமே படிச்சிட்டு அவனோட reply..!
frnd: poda dae

mine: full-ah படிச்சிட்டியா?

frnd: இன்னும் எத்தன நாளைக்கு இத சொல்லுவீங்க.. வேற பிரச்சனை வர வரிக்கும் தானே.. அப்புறம் மறந்துடுவீங்க # இங்கு மறதி ஒரு வியாதி
mine: first நீ fulla படி

frnd: content Nalla iruku.. நீ எழுதனதா?
mine: நம்மளால என்ன பண்ண முடியும்?

frnd: ஒரு நாள் எல்லாமே மாறும், ஆனால் அதை பாக்க நம்ம இருக்க மாட்டோம் #ஆன விதை நம்ம போட்டது..!
mine: சிரிப்புடன் முடிந்தது..! மாற்றத்துக்கான நாளை நோக்கி..!

30 வினாடிகள் எனக்காக ஒதுக்கி, அவன் படிச்ச draft copy நீங்களும் படிங்க

நீதி வேண்டும்..!
இது முதல் முறையல்ல. நிச்சயம் இது முடிவுமல்ல
அனைவரும் ஆதரவும், ஏதிர்ப்பும் தெரிவித்தபடி இருக்கும் நேரத்தில்
நான் மௌனம் காத்தேன்.., ஏனென்றால் இத பேச எனக்கு தகுதி உண்டானு
எனக்குள் ஒரு கேள்வி இருந்தது
என்னை சுற்றியிருப்பவர்கள் பெண்களை ரசிக்கிறார்கள், ரசிப்பதோடு சரி ஒருநாளும் ருசிக்க நினைத்ததில்லை, நினைத்தாலும் நினைப்போடு சரி 
8 வயது குழந்தை - கூட்டு பலாத்காரம் - இந்து கோவிலில்
கோவில்கள் புண்ணியம் இழந்து விட்டது
நீதி நிச்சயம் கிடைக்கபோவதுஇல்லை
ஆயினும் ஏன் இந்த போராட்டம் - ஆதரவு - சமூக வளையதளத்தில் புரட்சி
நானொரு ஆண் எனக்கூறுவதில் வெட்கி தலை குனிகிறேன்
உன் காமம் களைய நீ விரும்பினால்,
பருவம் கடந்தவளிடம் காதல் கொண்டு
அவள் உள்லே உன் காமக்கழிவை பேணுகொள்
இல்லையென்றல், உனக்காக தேவதாசிகள் இந்த உலகில் ஏராளம்
அவர்களிடம் உன் இச்சைகழிவை கழித்துக்கொள்
இதுவும் இல்லையென்றல், சுயஇன்பம் கொள், மைதா மாவிடம் கலவி கொள்
இங்கு தெருநாய்கள் ஏராளம் அங்கே காட்டு உன் ஆண்மையை
இதல்லாம் விட்டுவிட்டு, காமம் என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியாத அந்த குழந்தை
பக்குவம் அடையாத அவளது உள்ளுறுப்பு, அதை சிதைக்கும் அளவுக்கு அப்படி என்ன உங்களுக்கு ஒரு வெறி
அப்படி என்ன அடக்க முடியாத காமம்.. நினைத்து கூட பார்க்கமுடியவில்லை
என் கற்பனைக்கும் எட்டவில்லை..! அவள் தாங்கிய வலிகளை போல்
ஓராயிரம்மடங்கு வலிகளை உயிரிடன் நீங்கள் அனுபவிக்க வேண்டுகிறேன் ..!

கடவுளே.. காமம் ஏன் இந்த மிருகத்துக்குள் படைத்தாய்?
பலாத்காரம் தண்டிக்க வேண்டிய குற்றம்..!
இதுவரை இங்கு எவரும் தண்டிக்கப்படவில்லை..!

#பெண்மை

No comments:

Post a Comment