Friday, 13 December 2019

Unconditional Loss

காதலன் முன் காதலி இறப்பைவிட..
காதலி முன் காதலன் இறப்பு..

கொடுமையானது, வேதனையானது.

- கைதி

Wednesday, 11 December 2019

பிடித்த நிறங்கள்

Her: பிடித்த நிறம்?

அவன்: கருப்பு, சிவப்பு.

Her: நீவிர் திராவிடமா?

அவன்: இரண்டுமே என் இரு காதலிக்கு பிடித்த நிறங்கள்.

பெண் - பெண்

அவள் பெண்ணுடனா வாழ்வியல்,
கவிதையானது.

- அவனுடன் ஒப்பிடுகையில்

Monday, 9 December 2019

வகைப்பாடு

கண்டதும் வருவது காதல்தான் - முதற்பார்வையில்,
பேசிப்பழகி கலவிகடந்து வருவதும் - காதலே.

Saturday, 7 December 2019

உன் போதையில்

கற்பனை வாழ்க்கை
கவிதையான போதை..!

- அவள்

Friday, 6 December 2019

விலையின் மதிப்பு

இளமை * முதுமை
உயிர் * இறப்பு

- வேறுபடுவதுண்டு

Thursday, 5 December 2019

இலக்கணப்பிழையா?

ஒரு ஆண் தான் எப்போவும் அவளை தாங்கணுமா?
ஏன் அவள் அவனை தாங்கலாமே....

- இலக்கணப்பிழையா?

Wednesday, 4 December 2019

Tuesday, 3 December 2019

ராஜா (K) கமல்

நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி..
நமை சேர்த்த இரவுக்கு ஒரு நன்றி..

- Heyram

Sunday, 1 December 2019

காதல்தானே..?

பணியிடத்தில் உயர் அதிகாரியான அவளுக்கு..
பாதுகாவலன் (அவன்) இடத்திலே ஓர்-ஈர்ப்பு.

தவறா இது...? இச்சமுதாயத்தில்..

Monday, 25 November 2019

பழக்கவழக்கங்கள்

சில பழக்கவழக்கங்கள்
நம்மை விடாது..!
ஏனென்றால் அது
முதல் காத (லி/ல) - யிடம் கற்றதனால்.

தொடர்பு

காதல் என்பது
இதயத்துடன் தொடர்பற்றது ,
அது பாலுறுப்புடன்
தொடர்புடையது

Saturday, 23 November 2019

ஓரினச்சேர்க்கை

காதல்/அன்பு  பாலினத்திற்கு அப்பாற்பட்டது.

Friday, 22 November 2019

குப்பைக்காதல்

தெருமுனையில்
அவனுடன் அவள்
நிலவொளியில்
குப்பைதொட்டியருகில்.

Tuesday, 7 May 2019

காதல் அன்பு காமம்

பாலினத்திற்கு அப்பாற்பட்டது
ஆனால்,
ஓன்றுக்குஓன்று பிணைப்புண்டு

Tuesday, 23 April 2019

தலையணி கேட்பொறி

இக்காலத்தில் ஆண்களும்
தாலி அணிவதுண்டு
பெண்களைப்போலவே

*விதிமுறைக்கு உட்பட்டது

ஒளிவிளக்கு

வழித்தவறி களமிறக்கியது
நட்சத்திரக்கூட்டம்...


Wednesday, 10 April 2019

உயிர்கள்

இங்கு பிச்சைக்காரர்களுக்கும்
எனக்கும் ஓன்றும்
வித்தியாசமில்லை
- இரண்டுமே உயிர்கள்

முக்கியத்துவம்

உணவா? உறவா?
என்றாள்....
உணவே என்றான்..!

அமாவாசையில் அசைவம்.

Wednesday, 6 March 2019

வித்தியாசம்

காதல் வேறு கலவி வேறல்ல
அன்பும் காமமும் தான்
வேறு வேறு 

சோம்பேறித்தனம்

அவன் பொறுமை குணமுடையவன்
அது சோம்பேறித்தனம்

Thursday, 28 February 2019

கலர் மை பேனா

பள்ளி பருவத்திலே நிறைய
பச்சைகுத்தியதுண்டு
தனக்குத்தானே
கலர் மைப்பேனாவில்

Tuesday, 26 February 2019

முதலிரவு

பால்பருக தயாரானது
காளை (அவன்)
முதலிரவன்று